நெல்லை– மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளுடன் இயக்கப்பட்டது


நெல்லை– மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளுடன் இயக்கப்பட்டது
x
தினத்தந்தி 11 July 2018 9:30 PM GMT (Updated: 11 July 2018 3:17 PM GMT)

நெல்லை– மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளுடன் நேற்று முதல் இயக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை– மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளுடன் நேற்று முதல் இயக்கப்பட்டது.

தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் 

நெல்லையில் இருந்து மும்பை வரை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும். இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்த ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும் என பயணிகள் சார்பில் ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

நவீன வசதிகள் 

இந்த நிலையில், இந்த ரெயிலில் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக ஒரு பெட்டி 72 பயணிகளை கொண்டதாக இருக்கும். தற்போது கூடுதலாக பயணிகளின் இருக்கைகள் 80 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்டிகள் வண்ணமயமாக ஆக்கப்பட்டு உள்ளன. இந்த பெட்டிகளுக்கு நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நவீன ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.20 மணிக்கு புறப்பட்டது. பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை–பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஏற்கனவே நவீன வசதிகளுடன் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து ரெயில்களையும் நவீனமயமாக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Next Story