கிடப்பில் புதுவலசை புதிய சாலை


கிடப்பில் புதுவலசை புதிய சாலை
x
தினத்தந்தி 11 July 2018 3:30 AM IST (Updated: 11 July 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

புதுவலசையில் நீண்டகாலமாக புதிய சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பனைக்குளம்,

மண்டபம் யூனியனுக்கு உட்பட்டது புதுவலசை கிராமம். இந்த கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளிவாசல் வரை சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கடற்கரை செல்லும் சாலை நீண்டகாலமாக புதிய சாலையாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடும் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.

சித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் வரை திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதால் இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும், இதனை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


மேலும் இந்த பகுதியில் அரசின் திட்டப்பணிகளும் நடைபெறாமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story