வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் சொட்டுநீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் சொட்டுநீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 July 2018 4:00 AM IST (Updated: 12 July 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் சொட்டுநீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வத்திராயிருப்பு வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் 2018-19 வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் குறித்த பயிற்சி தம்பிபட்டி, ஆயர்தர்மம், நத்தம்பட்டி, இலந்தைக்குளம், குன்னூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களை வனஜா வட்டார தொழில் நுட்ப மேலாளர் வரவேற்றார்.

பயிற்சிக்கு காரியாபட்டி ஸ்டீபன் சிறுதானிய உற்பத்தி கம்பெனி அவர்கள் உழவர் ஆர்வலர் குழு எவ்வாறு அமைப்பது மற்றும் அதன் நோக்கங்கள் பற்றியும், சாஸ்தா சரவணகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்காச்சோளம் உற்பத்தியாளர் கம்பெனி உமவர் உற்பத்தியாளர் குழு அமைப்பது அதன் பயன்கள் பற்றியும் சுரேஷ் வேளாண்மை அலுவலர், நாராயணன் துணை வேளாண்மை அலுவலர் குழுவிற்கான விவசாயிகளை தேர்வு செய்தல், குழு பராமரிப்பு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.


ஒவ்வொரு பயிற்சியிலும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜான்பாண்டியன் மற்றும் சுதாசந்திரா ஆகியோர் செய்திருந்தனர். இதே போல விவசாயிகளுக்கு கலப்பின காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு நுண்ணீர்பாசனம் குறித்த பயிற்சி இலந்தைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயின் கம்பெனி விற்பனை அலுவலர் சரவணன் சொட்டுநீர் பாசனம் அமைப்பது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். வத்திராயிருப்பு வேளாண்மை உதவி இயக்குனர் சொட்டுநீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வேளாண்மை துறை மூலம் மானியம் வழங்கப்பட உள்ளது. மானியம் பெறுவதற்கு விவசாயிகள் சிட்டா, அடங்கள், வரைபடம், மண்மாதிரி சோதனை, ஆதார் நகல், தண்ணீர் சோதனை, ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைபடம் 2 ஆகியவற்றுடன் வேளாண்மை துறையை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story