கட்டாய திருமணம்; 17 வயது மணப்பெண் தற்கொலை தாலி கழுத்தில் ஏறிய சில மணி நேரத்தில் தீக்குளித்த பரிதாபம்


கட்டாய திருமணம்; 17 வயது மணப்பெண் தற்கொலை தாலி கழுத்தில் ஏறிய சில மணி நேரத்தில் தீக்குளித்த பரிதாபம்
x
தினத்தந்தி 12 July 2018 3:45 AM IST (Updated: 12 July 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது சீல நாயக்கன்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த குருசாமி என்பவருடைய மகன் கருப்பையாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை எழுமலை கிராமத்தில் உள்ள பெருமாள்கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமண வயது பூர்த்தியடையாத நிலையில் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் நடைபெற்றதாக தெரியவருகிறது.

இந்தநிலையில் காலையில் திருமணம் முடிந்து, மாலையில் மணமக்களை மறுவீடு செல்லும் நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றனர்.


அங்கு புதுமணப்பெண் முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதில் உடல் முழுவதும் கருகிய அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அய்யர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story