செல்லம்பட்டி ஒன்றியத்தில் பெரியாறு-வைகை வடிநில பகுதியில் ரூ.3¾ கோடி மதிப்பில் குடிமராமத்து பணி


செல்லம்பட்டி ஒன்றியத்தில் பெரியாறு-வைகை வடிநில பகுதியில் ரூ.3¾ கோடி மதிப்பில் குடிமராமத்து பணி
x
தினத்தந்தி 12 July 2018 4:00 AM IST (Updated: 12 July 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

செல்லம்பட்டி ஒன்றியத்தில் பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டத்தில் ரூ.3¾ கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகளை எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


உசிலம்பட்டி,

உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி பகுதியில் மதுரை பெரியாறு-வைகை வடிநில கோட்டத்தில் உள்ள 16 கண்மாய்களில் 2017-2018-ம் ஆண்டிற்கான குடிமராமத்து திட்டப் பணிகள் ரூ.3¾ கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,100 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த பணியை செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கொடிக்குளம்-வடுகபட்டி கண்மாயில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், முன்னாள் யூனியன் சேர்மன் பால்பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உக்கிரபாண்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏட்டாள் பழனி, அக்ரோ கூட்டுறவு சங்கத் தலைவர் ரகு, திருமங்கலம் பிரதான கால்வாய் நீர்பாசன சங்க தலைவர் முருகன், கிராம கமிட்டி தலைவர் பெருமாள், பெரியார் வைகை வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள் செல்வம், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.


அதன் பின்னர் எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்தப் பணிகள் அனைத்தையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த திட்டத்தின் மூலம் வரும் பயன்களை இந்த பகுதி விவசாயிகள் பெறுவார்கள் என அறிவுறுத்தினார். அதிகாரிகளும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இத்திட்டப் பணிகள் முடிக்கப்படும் என உறுதியளித்தனர்.

Next Story