சன்னகிரி தாலுகாவில் உப்புரானி, ஜோல்தால் கிராமங்களுக்குள், 5 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம்


சன்னகிரி தாலுகாவில் உப்புரானி, ஜோல்தால் கிராமங்களுக்குள், 5 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம்
x
தினத்தந்தி 11 July 2018 10:00 PM GMT (Updated: 11 July 2018 8:17 PM GMT)

சன்னகிரி தாலுகாவிற்கு உட்பட்ட உப்புரானி, ஜோல்தால் ஆகிய கிராமங்களுக்குள் 5 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

சிக்கமகளூரு,

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவிற்கு உட்பட்டது உப்புரானி மற்றும் ஜோல்தால் கிராமங்கள். இந்த 2 கிராமங்களும் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இந்த 2 கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டுயானைகள், இந்த 2 கிராமங்களுக்குள்ளும் புகுந்தன. பின்ன அவைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், காலால் மிதித்தும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும், தின்றும் நாசப்படுத்தின. அதையடுத்து அவைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பீதி அடைந்த கிராம மக்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர்.

மேலும் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

Next Story