மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + CITU in Namakkal The trade unions demonstrated

நாமக்கல்லில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் பணிமனையில் பணியில் இருந்த தொழிலாளியிடம் பசுபதிபாளையம் போலீசார் அராஜகமாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. கிளை தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மத்திய சங்க நிர்வாகி செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.