‘பயோசிப்’ பொருத்திக்கொள்ளும் சுவீடன் மக்கள்!


‘பயோசிப்’ பொருத்திக்கொள்ளும் சுவீடன் மக்கள்!
x
தினத்தந்தி 14 July 2018 3:00 AM IST (Updated: 12 July 2018 2:48 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை சுவீடனில் 3 ஆயிரத்து 500 பேர் தங்களது உடலில் பயோசிப் பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.

‘பயோசிப்’ என்பது செல்போன் சிம்கார்டு போன்று இருக்கும் மிகச் சிறிய மின்னணுப் பொருள். இதை நம் உடலில் எந்தப் பகுதியிலும் பொருத்திக்கொள்ளலாம்.

இந்த பயோசிப்பில் நம்முடைய தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். அதேபோல் பயணச்சீட்டு, அனுமதிச்சீட்டு போன்ற விஷயங்களைக் கையில் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில் சுவீடன் நாட்டில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, தங்கள் ஊழியர்கள் அனைவரும் கைகளில் பயோசிப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஊழியர்கள் தாமாக முன்வந்து தங்களது கைகளில் பயோசிப்பை பொருத்திக் கொண்டனர்.

இதற்காக ஒரு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பணியாளர்களின் கைகளில் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மருத்துவர்கள் பயோசிப்பை பொருத்தினர்.

இதனை எப்போது வேண்டுமானாலும் உடலில் இருந்து நீக்கிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோசிப்பில் தனி நபர் ஒருவரின் அனைத்துவிதமான தகவல்களும் அடங்கியிருக்கும்.

இதனை சுவீடன் நாட்டில் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும். தற்போது சுவீடனில் 3 ஆயிரத்து 500 பேர் இந்த பயோசிப்பை உடலில் பொருத்திக் கொண்டு இருப்பதால் உலகிலேயே அதிகமான மக்கள் இதனை பொருத்திக்கொண்ட நாடாக சுவீடன் விளங்குகிறது.

Next Story