தங்கப் பல்லை உடைத்துப் பிடுங்கிய கொள்ளையர்கள்!
பிரான்ஸ் நாட்டில் நடந்துசென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி, அவர் வாய்க்குள் இருந்த தங்கப் பற்களை பிடுங்கிச் சென்றுவிட்டனர்.
பிரான்சின் உபெர்விலியே பகுதியில் சமீபத்தில் ஒருநாள் நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரைச் சுற்றி வளைத்த ஒரு கொள்ளைக் கும்பல், அவரிடமிருந்து செல்போனை முதலில் பறித்தனர். பின்னர் அவர் வாயில் தங்கப் பல் கட்டியிருப்பதை அறிந்து வாயை உடைத்து, தங்கப் பற்களை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்து வந்து பாதிப்புக்குள்ளான நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், செல்போன் மற்றும் நான்கு தங்கப் பற்களை பறித்துச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story