மிகப் பெரிய மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு!


மிகப் பெரிய மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 14 July 2018 2:45 AM IST (Updated: 12 July 2018 3:24 PM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மஞ்சள் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லெசோத்தோ நாட்டின் வைரச் சுரங்கம் ஒன்றிலிருந்து அந்த 89 கேரட் மஞ்சள் வைரம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், இதற்கு முன் 25 கேரட் அளவிலான மஞ்சள் வைரமே மிகப்பெரிய மஞ்சள் வைரமாகக் கருதப் பட்டது எனவும், அதைத் தற்போது கிடைத்திருக்கும் புதிய வைரம் முறியடித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிய பிரமாண்டமான மஞ்சள் வைரத்தின் மதிப்பு 10 மில்லியன் பவுண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைர பூமியாகத் திகழும் ஆப்பிரிக்கா, உலகுக்குத் தொடர்ந்து வைரங்களை வழங்கிக் கொண்டி ருக்கிறது.

இங்கிருந்துதான் கடந்த 1905-ம் ஆண்டு சர் தாமஸ் கல்லினன் என்பவர் 3106 கேரட் எடை கொண்ட மிகப் பெரிய வைரத்தைக் கண்டுபிடித்தார். 

Next Story