நெல்லை தச்சநல்லூர் மண்டலத்தில் சொத்து வரி பெயர் மாற்றம்–குடிநீர் இணைப்பு பெற சிறப்பு முகாம்
நெல்லை தச்சநல்லூர் மண்டலத்தில் நடந்த சிறப்பு முகாமில் 91 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் மண்டலத்தில் நடந்த சிறப்பு முகாமில் 91 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
சிறப்பு முகாம்
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் சொத்து வரி பெயர் மாற்றம், புதிய வரிவிதிப்பு, காலிமனை வரிவிதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு முகாம் நடந்தது.
நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்தனர். இந்த விண்ணப்பங்கள் உடனே பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
91 பேருக்கு ஆணைகள்
இதில் சொத்துவரி பெயர் மாற்றம் 14 பேருக்கும், புதிய சொத்துவரி விதித்தலுக்கு 34 பேருக்கும், புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு 5 பேருக்கும், காலிமனை வரிவிதிப்பு 16 பேருக்கும், கட்டிட அனுமதி 10 பேருக்கும் மற்றும் இதர சான்றிதழ்கள் பெறுவதற்கு என மொத்தம் 91 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில் கண்காணிப்பாளர் மகாலட்சுமி, உதவி வருவாய் அலுவலர் தங்கபாண்டியன், சுகாதார அலுவலர் அரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story