விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் ஆனி பொங்கல் விழாவை முன்னிட்டு, 9–ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலையில் நடந்தது. சின்ன மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரகாஞ்சிபுரம்–வேம்பார் ரோட்டில் நடந்தன.
12 கிலோ மீட்டர் தூர சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 12 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புல்லட் அலியார் மாட்டு வண்டி முதலிடமும், மதுரை பரவை முத்துநாயகி மாட்டு வண்டி 2–வது இடமும், ஏனாதி ஏ.டி.எம். மாட்டு வண்டி 3–வது இடமும் பிடித்தது.
பரிசளிப்பு
தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூர பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் 13 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் விளாத்திகுளம் சிதம்பரநகர் அருண் பாண்டி மாட்டு வண்டி முதலிடமும், நெல்லை வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டி 2–வது இடமும், உசிலங்குளம் கருப்பந்துறை பாண்டி மாட்டு வண்டி 3–வது இடமும் பிடித்தது.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து 555, 2–வது பரிசாக ரூ.14 ஆயிரத்து 444, 3–வது பரிசாக ரூ.13 ஆயிரத்து 333, பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.9 ஆயிரத்து 999, 2–வது பரிசாக ரூ.8 ஆயிரத்து 888, 3–வது பரிசாக ரூ.7 ஆயிரத்து 777 வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story