திருவள்ளூரில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்


திருவள்ளூரில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 3:30 AM IST (Updated: 13 July 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவள்ளூர்,

தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமிற்கு தேவைப்படும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Next Story