செஞ்சியில் ரூ.49 லட்சம் செலவில் கட்டப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம்
செஞ்சியில் ரூ.49 லட்சம் செலவில் கட்டப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செஞ்சி கிளைக்கு ரூ.49 லட்சத்து 18 ஆயிரம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி ஏழுமலை, செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், மேலாண்மை இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய வங்கி கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
இதில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ராஜேந்திரன், வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கநாதன், செஞ்சி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, வல்லம் ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி, மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, ஒன்றிய முன்னாள் குழு தலைவர் அண்ணாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் கண்ணன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் பூங்குன்றம், மேல்சேரி சேகர், பட்டி பாலகிருஷ்ணன், அனந்தபுரம் நகர செயலாளர் அரிராமன், நடராஜன், நிர்வாகிகள் பசுபதி, கமலக்கண்ணன், செல்வராஜ், இளைஞர் அணி சரவணன், பாஸ்கர், இளங்கீர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொதுமேலாளர் சசி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story