காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. மார்க்கெட் முன்புள்ள கோட்டைக்குளம் சாலை மற்றும் தாலுகா அலுவலக சாலை ஆகியவற்றில் பழக் கடை, காய்கறிகள் என 110 கடைகள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால் சாலையோர கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முறையிட்டனர். அப்போது பல ஆண்டுகளாக உள்ள கடைகளை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று முறையிட்டனர். இதையடுத்து காந்தி மார்க்கெட்டுக்கு உள்ளே காலியாக இருக்கும் இடத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) உதயக் குமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர் கள் நேற்று காலை காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளை கண்டதும் பலர் தாமாக முன்வந்து கடைகளை அகற்றி கொண்டனர். இதையடுத்து அகற்றப்படாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
மேலும் கடைகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த கூரைகள், பெட்டிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்து சென்றனர். அதேநேரம் காந்தி மார்க்கெட்டுக்கு உள்ளே இருக்கும் காலி இடத்தில் சாலையோர வியாபாரிகளுக் கும் இடம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story