திருமங்கலம்-செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


திருமங்கலம்-செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 14 July 2018 5:00 AM IST (Updated: 14 July 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைய உள்ள இடங்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ராஜபாளையம்,


திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு சென்னையில் தலைமை பொறியாளர் வெங்கிடகிருஷ்ணனிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் அடிப்படையில் பொறியாளர்கள் பிரபாகரன், பாரதிராஜா ஆகியோர் நேற்று முன்தினம் முதற்கட்ட பணியாக நேரில் சென்று எம்.எல்.ஏ.யுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறியதாவது:-திருமங்கலம், புதுப்பட்டி, கல்லுப்பட்டி, கிருஷ்ணன்கோவில், சத்திரப்பட்டி அட்டை மில், ராமலிங்காபுரம், வழியாக முதுகுடி வழியாக முதற்கட்டமாகவும், இதில் அத்திகுளம், கோதைநாச்சியார்புரம் ஆகிய 2 இடங்களில் ரெயில்வே மேம்பாலமும், 132 இடங்களில் சிறு மற்றும் பெரிய பாலங்களுடன் 60 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.


மேலும் முதுகுடி வரையிலும் நான்கு வழிச்சாலை அமைய உள்ளதால் ராஜபாளையத்தை அடுத்துள்ள கிராமப்புற பகுதி மக்கள் அதிக அளவில் பயன்பெற உள்ளனர். இதுகுறித்து மதுரை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கூறி முதுகுடியில் இருந்து மீனாட்சிபுரம், புனல்வேலி, புத்தூர், சொக்கநாதன்புத்தூர் வழியாக சிவகிரி வரையிலான சாலையை இணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, கனகராஜ், நவமணி, வேல் முருகன் ஆகியோர் சென்றனர்.

Next Story