மாவட்ட செய்திகள்

விளைச்சல் அதிகரிப்பால்மிளகு விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்ததுஏற்றுமதியும் சரிவு + "||" + Yield increase Pepper price has fallen by Rs 600 per kg Exports are falling

விளைச்சல் அதிகரிப்பால்மிளகு விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்ததுஏற்றுமதியும் சரிவு

விளைச்சல் அதிகரிப்பால்மிளகு விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்ததுஏற்றுமதியும் சரிவு
விளைச்சல் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி குறைவால் மிளகு விலை கிலோவுக்கு ரூ.600 வரை குறைந்துள்ளதாக வாசனை உணவுப்பொருட்கள் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை,

உணவுப்பொருட்களில் மிகவும் விலை உயர்ந்ததாக வாசனை பொருட்கள் என்று சொல்லப்படும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, முந்திரிபருப்பு, உலர் திராட்சை ஆகியன உள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய மிளகு என்பது, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. கேரளத்து மிளகை ரோமர்கள், அரேபியர்கள் விரும்பி வாங்கிச் சென்ற வரலாற்று சான்றுகளும் உள்ளன.


இன்றளவும் உணவுப்பதார்த்தங்களில் மிளகு கட்டாயம் இடம்பெற்று விடுகிறது. விஷ முறிவுக்கான மருந்துகளில் மிளகும் ஒன்றாக இருக்கிறது. இத்தனை குணாதிசயங்கள் நிறைந்த மிளகு சமீபகாலமாக கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், மிளகின் விலை திடீரென்று சரிந்துள்ளது.

இது குறித்து வாசனை உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

இந்திய மிளகுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம். இதனால், முதல் தர மிளகு பெரும்பாலும் ஏற்றமதி செய்யப்படும். உள்ளூர் மார்க்கெட்டில் இந்த மிளகு விலை அதிகம் என்பதால், பெரும்பாலும் 2-ம் ரகம், சாதாரண ரக மிளகு மட்டுமே கிடைத்து வந்தது. ஒரு கட்டத்தில், பப்பாளி விதை மற்றும் ரசாயன எண்ணெய் கலந்து மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலான ஓட்டல்களில் இந்த வகை மிளகு பயன்படுத்தப்படுகிறது.


இந்த நிலையில், வரத்து குறைவால் மிளகு விலை கடந்த ஒரு வருடமாக முதல் ரகம் கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கலப்படம் மற்றும் சாதாரண ரக மிளகு ரூ.300 முதல் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு, வியட்நாம், இலங்கை மற்றும் இந்தியாவில் கேரளா, தமிழகத்தின் கொடைக்கானல், கொல்லிமலை, குமுளி ஆகிய பகுதியில் விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஆனால், விற்பனை குறைந்துள்ளது. அத்துடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மிளகின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. இதனால், தற்போது முதல் தர மிளகு கிலோ ரூ.400-க்கும், பிற ரகங்கள் வழக்கமான விலையிலும் விற்பனையாகி வருகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.