மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 July 2018 3:15 AM IST (Updated: 14 July 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உளள் கீராலத்தூர் ஊராட்சி திருக்கொள்ளிக்காட்டை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மகன் ராஜீ (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஆலத்தம்பாடியில் உள்ள தனது பெரியம்மா விஜயா வீட்டிற்கு சென்று விட்டு, இரவு அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சின்னம்மா இந்திரா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணலி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜீ தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சவுந்தரராஜன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story