மாவட்ட செய்திகள்

குடிசை வீடு இடிந்ததில் 4 வாலிபர்கள் உயிர் தப்பினர் + "||" + 4 young men survived when the hut was destroyed

குடிசை வீடு இடிந்ததில் 4 வாலிபர்கள் உயிர் தப்பினர்

குடிசை வீடு இடிந்ததில் 4 வாலிபர்கள் உயிர் தப்பினர்
தாராவி சோஷியல் நகரில் குடிசை வீடு இடிந்ததில் 4 வாலிபர்கள் உயிர் தப்பினர்
மும்பை,

மும்பை தாராவியை சேர்ந்தவர் முகமது ரயீஷ் அகமது(வயது50). சோஷியல் நகரில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு குடிசை வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தார். அந்த வீட்டில் 4 வாலிபர்கள் தங்கியிருந்தனர். அண்மையில் விடாமல் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக இந்த வீட்டின் சுவர் உறுதி தன்மையை இழந்து இருந்து உள்ளது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் குடிசை வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இந்த சம்பவத்தின் போது, அங்கு தங்கியிருந்த 4 வாலிபர்கள் வீட்டில் இல்லை. ெவளியில் சென்றிருந்து உள்ளனர். இதனால் அவர்கள் 4 பேரும் உயிர்தப்பினார்கள்.

தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அந்த வீட்டின் எஞ்சிய சுவர்களையும் இடித்து தள்ளினார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்
குர்லாவில் ரெயில்வே காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
பிவண்டியில் நேற்று இரவு 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
3. வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி
வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். #Varanasi #FlyoverCollapses