ஆரேகாலனியில் 32 மாடியில் மெட்ரோ பவன் கட்டிடம்


ஆரேகாலனியில் 32 மாடியில் மெட்ரோ பவன் கட்டிடம்
x
தினத்தந்தி 14 July 2018 5:06 AM IST (Updated: 14 July 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஆரேகாலனியில் 32 மாடிகள் கொண்ட மெட்ரோ பவன் கட்டிடத்தை கட்ட எம்.எம்.ஆர்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் நாளுக்கு நாள் போக்குவரத்து ேதவை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மோனோ மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது மும்பை புறநகர் பகுதியான காட்கோபர்- வெர்சோவா இடையே மட்டும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பாந்திரா- சீப்ஸ்-கொலபா இடையே சுரங்க மார்க்கமாக 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதுதவிர, வடலா- காட்கோபர்- முல்லுண்டு- தானே- காசர்வடவலி, தானே- பிவண்டி- கல்யாண் உள்ளிட்ட மேலும் சில மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மும்பை ஆரேகாலனியில் அமைக்க எம்.எம்.ஆர்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது.

இதற்காக அங்கு 32 மாடிகொண்ட மெட்ரோ பவன் என்ற கட்டிடத்தை கட்டவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், அங்கு மெட்ரோ பவனை கட்ட எம்.எம்.ஆர்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story