பேட்டையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு


பேட்டையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2018 3:30 AM IST (Updated: 14 July 2018 5:22 PM IST)
t-max-icont-min-icon

பேட்டையில் நடைபெற்று வரும் ரூ.230 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.

நெல்லை, 

பேட்டையில் நடைபெற்று வரும் ரூ.230 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.

குடிநீர் திட்டப்பணிகள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.230 கோடி மதிப்பீட்டில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான குழாய் பதிக்கும் பணி பேட்டை பகுதியில் நடந்து வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலத்திற்கும் பயன்படக் கூடிய வகையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பேட்டை பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு, வழங்கப்படவுள்ள குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளேன். மேலும், இந்த பணிகளை விரைந்து முடித்திடவும், அருகாமையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிரசாத், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணா சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story