ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சி: டிப்ளமோ என்ஜினீயர் கைது


ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சி: டிப்ளமோ என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 15 July 2018 2:45 AM IST (Updated: 14 July 2018 8:48 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மை உடைத்து பணம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட டிப்ளமோ என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை, 

சுரண்டையில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மை உடைத்து பணம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட டிப்ளமோ என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டிஎம்.மில் கொள்ளை முயற்சி 

சுரண்டை பஸ் நிலையம் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் இந்த ஏ.டி.எம்.மூலம் ஏராளமானோர் பணம் எடுத்து செல்வர். இதனால் இந்த ஏ.டி.எம்.மில் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர் தப்பி சென்று விட்டார்.

நேற்று காலையில் அந்த எந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர்கள், ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிப்ளமோ என்ஜினீயர் கைது 

சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கவிதா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கண்காமிப்பு கேமரா உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இரவு நேரத்தில் அந்த பகுதியில் நடமாடிய நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில், அந்த ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது, சுரண்டை அருகில் உள்ள மரியதாய்புரத்தை சேர்ந்த அந்தோணிச்சாமி மகன் ஜான் வியாகப்பன்(வயது20) என தெரிய வந்தது. இவர், டிப்ளமோ என்ஜினீயர் ஆவார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story