பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 981 வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு


பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 981 வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு
x
தினத்தந்தி 15 July 2018 4:15 AM IST (Updated: 14 July 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் தலைவருமான பாலராஜ மாணிக்கம் தலைமையில் நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் தலைவருமான பாலராஜ மாணிக்கம் தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீஜா, மாவட்ட சட்ட ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கண்ணையன் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலுள்ள நிலுவையில் உள்ள வாரா கடன் பொறுத்த வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

இதில் 48 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.85 லட்சத்து 100–க்கும், 14 சிவில் வழக்குகளில் ரூ.84 லட்சத்து 99 ஆயிரத்து 707–க்கும், 855 சிறு குற்ற வழக்குகளில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 600–க்கும் தீர்வு காணப்பட்டது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 981 வழக்குகளில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 78 ஆயிரத்து 370–க்கு தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் விஜயகுமாரி, மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story