வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
தமிழக அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தொடர்புடைய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசால் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டுக்கு 42 பணிகள் மேற்கொள்ள சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது 12 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story