சாத்தூர் அருகே கிணற்றில் மின்வாரிய ஊழியர் பிணம்
சாத்தூர் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி கிணற்றில் மின்வாரிய ஊழியர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 40). இவர் மின்வாரிய துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனால் ராமகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை வெங்கடாசலபுர ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. காலனியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாத்தூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறைனர் மற்றும் போலீசார் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.