திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்
திருவள்ளூர் மாவட்டம் குமரப்பேட்டை, காட்டுப்பள்ளி மற்றும் பெரியஓபுளாபுரம் ஆகிய ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள குமரப்பேட்டை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோ தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் காயத்திரி, ரவி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விவேகானந்தா, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 54 மனுக்களை தாசில்தார் இளங்கோ பெற்றுக்கொண்டார். அதில் 11 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை அவர், பயனாளிகளுக்கு வழங்கினார்.
மீதம் உள்ள 43 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக கிராம உதவியாளர்கள் ஷேக்தாவூத், கருணாகரன், திருமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். முடிவில் கிராம உதவியாளர் முனிவேல் நன்றி கூறினார்.
மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி ஊராட்சியில் நடந்த அம்மா திட்ட முகாமுக்கு பொன்னேரி தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முனுசாமி வரவேற்றார்.
முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு தாசில்தார் கார்த்திகேயன் வழங்கினார்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் தேவன், தேவராஜ், விஜயபாபு, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்நாதன் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடந்தது. வருவாய் ஆய்வாளர்கள் பார்த்தசாரதி, கந்தசாமி, கிராம நிர்வாக அதிகாரி ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 39 மனுக்களும், விதவை உதவித்தொகை தொடர்பாக 7 மனுக்களும், இதர மனுக்கள் 3 உள்பட மொத்தம் 49 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அதில் 5 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு தனி தாசில்தார் செந்தில்நாதன் வழங்கினார்.
முன்னதாக கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் வரவேற்றார். முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story