புதுவை மாவட்ட கலெக்டராக சவுதரி அபிஜித் விஜய் நியமனம்
புதுவை மாவட்ட கலெக்டராக சவுதரி அபிஜித் விஜய் நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு புதிதாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த மாதம் (ஜூன்) இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி தர்செம்குமாருக்கு மின் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் ஆணையராகவும், செயலராகவும் பதவி வழங்கப்பட்டு உள்ளது. கூடுதலாக அவருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தலைவர் பொறுப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்மா ஜெய்ஸ்வாலுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை, பொருளாதாரம், புள்ளியியல், அச்சு, எழுதுபொருட்கள், முப்படை நலத்துறை மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் மையம் ஆகியவை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுதரி அபிஜித் விஜய் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். திட்ட அமலாக்க முகமையின் திட்ட இயக்குனராகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாகவும் அவர் செயல்படுவார். மேலும் அரசு செயலர் தேவேஸ் சிங்கிற்கு கூடுதலாக பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. கவர்னர் கிரண்பெடி உத்தரவின்பேரில் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.