வெறிச்சோடிய மீன் மார்க்கெட்டுகள் இயல்பு நிலைக்கு திரும்பின மீன்கள் விலை சரிவு
‘பார்மலின்’ ரசாயன கலப்பு செய்தி வெளியானதால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக வெறிச்சோடிய மீன் மார்க்கெட்டுகள் இயல்பு நிலைக்கு திரும்பின. மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை,
கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்ட மீன்களில், பிணத்தை பதப்படுத்த உதவும் ‘பார்மலின்’ என்ற ரசாயனம் கலந்து இருப்பதாக கேரள மாநில அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ‘பார்மலின்’ ரசாயனம் புற்று நோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது என்பதால், கேரளாவில் தமிழக மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால், தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மீன் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், உணவுத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் மீன் மார்க்கெட்டுகள், மீன்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். கும்பகோணம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலந்து இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்திற்கு தேவையான மீன்களில் 70 சதவீதம் மீன்களே தமிழக மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. எனவே தேவையை விட அளிப்பு குறைவாக இருப்பதால், மீன்களை பதப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை” என்றார்.
மேலும், “வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலந்துள்ளதா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கலப்படம் செய்யப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் ரசாயன பீதி காரணமாக மீன் வங்குவதை தவிர்த்து வந்த பொதுமக்கள் தற்போது மீன்களை வாங்க தொடங்கி உள்ளதாக மீன் வியாபாரி சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மீன், இறால் சிறு வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் கூறும்போது, “மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலக்கப்படுவதாக செய்தி பரவியதும் மீன் விற்பனை சற்று குறைந்தது. எனினும் மொத்தமாக மீன்கள் வாங்குபவர்கள் வழக்கம்போல் வாங்கிச் சென்றனர். சில்லரைக்கு ஒரு கிலோ, 2 கிலோ மீன்கள் வாங்குவோர் தான் மீன் வாங்க அச்சப்பட்டனர். அவர்களில் வழக்கமாக மீன் வாங்க வருபவர்களிடம் நாங்கள் எடுத்துக்கூறிய பின்னர் அவர்கள் மீன் வாங்க தொடங்கி உள்ளனர்.
எங்கள் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பெரியரக மீன்களில் தான் ரசாயனம் கலக்க வாய்ப்பு உள்ளது. நாங்கள் காசிமேடு, பழவேற்காடு, ஆரப்பாக்கம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் இருந்து மீன்களை வாங்கி விற்பனை செய்கிறோம். இரவு பிடிக்கப்படும் மீன்கள் அதிகாலை 3.30 மணிக்குள் மார்க்கெட்டுக்கு வந்து விடுவதால் ரசாயனம் கலப்பதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு விற்பனை செய்யும் மீன்களைத் தான் எங்கள் குடும்பத்தினரும் சாப்பிடுகிறோம்.” என்றனர்.
சிறு வியாபாரிகளான சுலோச்சனா, ஆதிலெட்சுமி ஆகியோர் கூறும்போது, “மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பிறகு மீன்கள் விற்பனை மந்தமாகத்தான் இருக்கிறது. வழக்கமான லாபத்தை விட குறைவாக வைத்து மீன்களை விற்பனை செய்து வருகிறோம். இதனால், குடும்ப செலவுக்கு சிரமமாகத்தான் இருக்கிறது” என்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்த அரும்பாக்கத்தை சேர்ந்த லதா என்பவர் கூறும்போது, “நான் வாரத்திற்கு ஒரு முறை இங்கு வந்து தான் மீன் வாங்குவது வழக்கம். மீனில் ரசாயனம் கலந்து இருப்பதாக செய்தி வந்த போதிலும், நான் தொடர்ந்து மீன் வாங்கித்தான் வருகிறேன். மீன் சுவையில் எவ்வித மாற்றமும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.
புரசைவாக்கத்தை சேர்ந்த வங்கி அதிகாரி பயஸ் என்பவர் கூறும்போது, “மீனில் ‘பார்மலின்’ ரசாயனம் கலந்து இருப்பதாக செய்தி வெளியானதும் மீன் வாங்குவதை நிறுத்தி இருந்தோம். தற்போது தமிழகத்தில் உள்ள மீன்களில் ரசாயனம் கலப்பு இல்லை என்ற செய்திகள் வெளியானதை தொடர்ந்து மீன் வாங்க வந்துள்ளோம். மீன் சாப்பிடாமல் இருக்கவும் முடியாது அல்லவா?” என்றார்.
கண்ணதாசன் நகரை சேர்ந்த மஞ்சுளா கூறும்போது, “நாங்கள் கடந்த வாரம் ஏற்பட்ட பரபரப்பால் மீன் வாங்குவதை நிறுத்தி இருந்தோம். அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் மீன்களில் ரசாயன கலப்பு இல்லை. மக்கள் அச்சப்படவேண்டாம் என்ற செய்தியை பார்த்த பிறகு மீண்டும் மீன் வாங்க தொடங்கி உள்ளோம்” என்றார்.
எழும்பூரை சேர்ந்த கிளமண்ட்-அனிதா தம்பதியினர் மீன் வாங்க வந்தனர். கிளமண்ட் கூறும்போது, “பூர்வீகமே சென்னை தான். சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இதுபோன்ற ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் தொடர்ந்து மீன் சாப்பிட்டு வருகிறேன். மீன் சுவையில் எவ்வித மாற்றமும் இல்லை” என்றார்.
மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலந்துள்ளதாக வெளிவந்த செய்திகளை தொடர்ந்து வெறிச்சோடி காணப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி இருப்பதை பார்க்க முடிந்தது. இதே போன்று, காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காவாங்கரை, சைதாப்பேட்டை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட பிற மார்க்கெட்டுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. மேலும், இந்த பரபரப்பையொட்டி, மீன் விற்பனை குறைந்ததால், தற்போது மீன்களின் விலையும் குறைந்து உள்ளது.
இந்த நிலையில், காசிமேடு, போரூர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய இடங்களில் இருந்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்ட மீன்களின் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, காசிமேடு பகுதியில் இருந்து ஆய்வு செய்யப்பட்ட கானாங்கெழுத்தி மீனில் ஒரு கிலோவுக்கு 5 மில்லி கிராமுக்கு மேலும், தண்ணீர் பன்னா மீனில் ஒரு கிலோவுக்கு 50 மில்லி கிராமுக்கு மேலும், எம்.ஜி.ஆர். நகர் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பாறை மீனில் ஒரு கிலோவுக்கு 5 மில்லி கிராமுக்கு அதிகமாகவும் ‘பார்மலின்’ ரசாயனம் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அதே பகுதிகளில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மற்ற மீன்களான ஏரி வவ்வால், சங்கரா, கிழங்கான், சுறா, கணவா போன்ற மீன்களில் ரசாயன கலப்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Related Tags :
Next Story