வெளியூர் ‘பெர்மிட்’ உள்ள ஆட்டோக்களை கடலூரில் ஓட்டக்கூடாது டிரைவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வெளியூர் ‘பெர்மிட்’ உள்ள ஆட்டோக்களை கடலூரில் ஓட்டக்கூடாது என்று டிரைவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் உத்தரவிட்டார்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களுடன் வந்து பங்கேற்றனர். புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகன் வரவேற்று பேசினார். கூட்டத்துக்கு கடலூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆட்டோ டிரைவர்களுக்கு ஒழுக்கம் கட்டுப்பாடு இருக்க வேண்டும், ‘நோ பார்க்கிங்’ இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பாதி அகற்றி விட்டோம், இனி நீங்கள் அங்கே வழியை அடைப்பது போல ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. ஆட்டோ டிரைவர்களின் இருக்கைக்கு இருபுறமும் பயணிகளை அமர வைக்கக்கூடாது, அவ்வாறு பயணிகளை டிரைவர் இருக்கையில் அமர வைத்தால் ஆட்டோக்களை பறிமுதல் செய்வோம்.
வெளியூரில் ‘பெர்மிட்’ வாங்கிக்கொண்டு கடலூரில் ஆட்டோக்களை ஓட்டக்கூடாது, அவ்வாறு 1,500 ஆட்டோக்கள் வரை கடலூரில் ஓடுவதாக தெரியவந்துள்ளது. அதுபோன்ற ஆட்டோக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ‘பேட்ஜ்’, ஒட்டுனர் உரிமம் ஆகியவற்றை டிரைவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆட்டோ உரிமையாளர் பெயர், டிரைவர் பெயர், முகவரி போன்றவற்றை ஆட்டோவில் பயணிகளுக்கு தெரியும்படி எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை போக்குவரத்து ஆய்வாளர் கண்காணிப்பார். எந்தெந்த ஆட்டோ ஸ்டாண்டில் எத்தனை ஆட்டோக்கள் ஓடுகின்றன, அந்தந்த ஆட்டோ டிரைவர்களின் பெயர், செல்போன் நம்பர், ஆட்டோ பதிவு எண் ஆகியவற்றை ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர்கள் சேகரித்து அந்தந்த போலீஸ் நிலையத்தில் ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் ஆல்பேட்டை பகுதியில் இருந்து வரும் ஆட்டோக்கள், மஞ்சக்குப்பம் நேதாஜி ரோடு வழியாக வரக்கூடாது, அவர்கள் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே இடதுபுறமாக திரும்பி செயின்ட் ஜோசப் கல்லூரி சாலை வழியாக வர வேண்டும்.
‘பேட்ஜ்’ இல்லாமல் ஆட்டோ ஓட்டினால், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதோடு தகுதியற்றவர்களை வைத்து ஆட்டோ ஓட்டியதற்காக உரிமையாளருக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மது அருந்தி விட்டு ஓட்டினால் வழக்குப்போடுவோம். துரை ஓட்டல் முன்பும், லாரன்ஸ் ரோட்டிலும் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் பேசினார்.
முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story