ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.59¼ கோடி அபராதம் வசூல்


ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.59¼ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 15 July 2018 5:20 AM IST (Updated: 15 July 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புறநகர் மின்சார ரெயில் சேவை பொதுமக்களின் உயிர் நாடியாக உள்ளது.

மும்பை,

மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களால் ரெயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இதில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்து பிடிபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை தகவல்களை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

இதில், கடந்த 3 மாதத்தில் மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.59 கோடியே 36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே மாதங்களில் வசூலானதை விட 9.91 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.54 கோடி வசூலிக்கப்பட்டு இருந்தது.

இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. 

Next Story