மூங்கில் பிரியாணி


மூங்கில் பிரியாணி
x
தினத்தந்தி 15 July 2018 12:42 PM IST (Updated: 15 July 2018 12:42 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் மூங்கில் பிரியாணி பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

ந்திராவில் மூங்கில் பிரியாணி பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. விசாகபட்டினம் அருகே உள்ள அராக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பரிமாறப்படும் இந்த மூங்கில் பிரியாணியை மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் மாநில சுற்றுலாத்துறை ஈடுபட்டுள்ளது.

அராக்கு பள்ளத்தாக்கு பகுதி பசுமையான காடுகளால் சூழப்பட்டிருக்கும், அழகிய இயற்கை வனப்பகுதி. அங்கு வளரும் மூங்கில்களில் பிரியாணி தயாரிக்கப்படும் விதமும், அதன் சுவையும் வித்தியாசமானதாக இருக்கிறது. மூங்கில் மரத்தை சிறு சிறு துண்டுகளாக குடுவை வெட்டி எடுத்துக்கொள்கிறார்கள். அதன் உள்ளே பிரியாணி தயார் செய்வதற்கு தேவை யான அனைத்து பொருட்களை யும் ஒன்றாக கலந்து உள்ளே செலுத்துகிறார்கள். மூங்கிலின் இரு பகுதி துவாரங்களையும் இலைகளால் மூடிவிடுகிறார்கள். பின்னர் மூங்கில்களை நெருப்பில் வாட்டுகிறார்கள்.

மூங்கிலின் வெளிப்பகுதி யில் கருமை நிறம் படர்ந்து தீப்பிடித்து எரியும் வரை சமையல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நெருப்பு மூங்கிலுக்குள் புகுந்து பிரியாணியை வேகவைக்கிறது. மூங்கில்கள் நெருப்பில் எரிந்தாலும் பிரியாணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக இதனை தயார் செய்கிறார்கள். நன்கு வெந்ததும் பிரியாணியை மூங்கிலில் இருந்து வெளியே எடுத்து பரிமாறுகிறார்கள். இந்த பிரியாணி புதுமையான சுவையை கொடுப்பதால் அதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். அதனால் ஆந்திராவிற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பிரியாணியை பிரபலப்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை முயற்சி எடுத்து வருகிறது.

இதேபோல் புட்டரேகுலு, காக்கிநாடா கஜா மற்றும் உவச்சரு போன்ற பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

Next Story