பழங்குடியின அழகி
பழங்குடி இன பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் இந்தியாவின் முதல் பழங்குடியின அழகி என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார், பல்லவி துருவா.
பழங்குடி இன பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் இந்தியாவின் முதல் பழங்குடியின அழகி என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார், பல்லவி துருவா. இவர் ஒடிசா மாநிலத்திலுள்ள கோராபுட் மாவட்டத்தை சேர்ந்தவர்.
பழங்குடியின பெண்களுக்கிடையே சிறந்த அழகியை தேர்ந்தெடுக்கும் வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்த அழகுப்போட்டி நடந்தது.‘ஆதி ராணி' என்ற அடைமொழியுடன் நடத்தப்பட்ட இந்த போட்டியை ஒடிசா மாநில அரசின் பழங்குடியின துறை மற்றும் சுற்றுலா துறை ஆகியவை இணைந்து நடத்தியது. போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பழங்குடியினரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உடை அணிந்திருந்தனர்.அவர்கள் பல்வேறு வகைகளில் தங்கள் திறமைகளை அரங்கேற்றினார்கள். அவர்களில் 20 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் பல்லவி துருவா பழங்குடியின அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பஞ்சமி மஜ்ஹி, ரேஷ்மி ரேகா ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
இந்த அழகி போட்டியை நடத்தியதன் நோக்கம் பற்றி நடுவர் குழுவில் இடம்பெற்ற சிதத்மிகா,‘‘பழங்குடியின பெண்களின் அழகை கவுரவிப்பதன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம். நமது நாட்டின் பழங்குடியின கலாசாரங்களை மேம்படுத்தும் தேசிய அளவிலான முயற்சி இது. இந்த போட்டி பழங்குடியினரின் கலை வடிவங்கள், நடனம், கலாசாரம் போன்றவற்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.பெண்களின் தனித்துவமான அடையாளத்தை இந்த போட்டியின் மூலம் வெளிக்கொண்டு வர முயற்சித்தோம். அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்கிறார்.
அழகி பட்டத்தை வென்ற பல்லவி கூறுகையில், ‘‘என்னை போன்ற பழங்குடியின பெண்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லவோ, படிக்கவோ அனுமதி இல்லை. இந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பழங்குடியின பெண்கள் கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைதான் நீடிக்கிறது. அந்த நிலை மாறி அனைத்து பெண்களும் உயர்கல்வி பயில வேண்டும். காலங்காலமாக பின்பற்றிவரும் ஒருசில மூடப்பழக்கவழக்கங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்’’ என்கிறார்.
Related Tags :
Next Story