காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் கெண்டேனஅள்ளி ஊராட்சி பெருங்காடு-ஐயனார்கொட்டாய் இடையே ரூ.53.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது. இதே போன்று அத்திமுட்லு ஊராட்சி கெண்டேனஅள்ளியில் புதிய பாலம் அமைக்கும் பணி, கொலசனஅள்ளி ஊராட்சி வேப்பிலைஅள்ளியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவன் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மொத்தம் ரூ.1.38 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் நாகராசன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போன்று கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) வரும் என எதிர்பார்ப்பதால் தர்மபுரி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
காவிரி கரையோரம் வாழும் மக்களுக்கு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு, அங்குள்ள மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story