போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது
புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் பாகர்ஷா வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார், பாகர்ஷா வீதியில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 96 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புகையிலை பொருட்களை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பறிமுதல் செய்ய முயன்றார். அப்போது கடை ஊழியர்களான அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (23), நாராயணன் (40) ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தினேஷ், நாராயணன் ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்ததோடு, கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story