ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலால் தான் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் - அர்ஜூன் சம்பத் பேட்டி
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலால் தான் காமராஜர் ஆட்சியை கொண்டுவர முடியும் என விருதுநகரில் அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார்.
விருதுநகர்,
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:–
ரஜினிகாந்திற்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரது ஆன்மிக அரசியலால் தான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வரமுடியும். பா.ஜனதாவும், ரஜினிகாந்தும் இணைந்து தேர்தலை சந்திக்க இந்து மக்கள் கட்சி முயற்சி மேற்கொள்ளும். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்துகளை தெளிவாக சொல்ல வேண்டும். மக்களுக்கு புரியும்படி தெரிவிக்க வேண்டும். கமல்ஹாசன் தமிழர் என்றாலும், தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சியில் டி.வி. நிகழ்ச்சி நடத்துகிறார். இது ஏற்புடையதல்ல. அவர் இரட்டை வேடம் போடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அர்ஜூன் சம்பத், காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story