ரெட்டையூருணியில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
மண்டபம் யூனியன் ரெட்டையூரணியில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 116–வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மண்டபம் யூனியன் தாமரைக்குளம் பஸ் நிறுத்தம் மற்றும் ரெட்டையூருணி கிராமம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அடைக்கலம், ஒன்றிய அவை தலைவர் மலைச்சாமி, ஒன்றிய பொருளாளர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டி, மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிகாமணி, ஊராட்சி கழக செயலாளர்கள் பட்டணம்காத்தான் ராஜேந்திரன், ஆற்றாங்கரை நாகராஜ், நாகாச்சி காளிதாஸ், பிரப்பன்வலசை சிவக்குமார், ரெட்டையூரணி ஜெகதீசன், மற்றும் வி.ஜி.முத்து, கே.ஜி.சுரேஷ், ரவி, காசி, முனியசாமி, தாமரைக்குளம் ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி, கிளை செயலாளர்கள் தாமரைக்குளம் சேது, மாணிக்கம், வலங்காபுரி வெற்றி, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் ஒன்றிய மாணவரணி செயலாளர் கார்த்திக், தாமரைக்குளம் திருமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதேபோல மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரெட்டையூருணி, தாமரைக்குளம், நத்தகுளம, தலைத்தோப்பு ஆகிய ஊர்களில் காமராஜர் உருவச்சிலை மற்றும் படங்களுக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஒன்றிய பொருளாளர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் தேன்மொழி, தாமரைக்குளம் தனுக்கோடி, ஊராட்சி கழக செயலாளர்கள் வெள்ளரி ஒடை குப்பபிச்சை, பனைக்குளம் அப்துல் ஹலீம், தாமரைக்குளம் சோமசுந்தரம், குயவன்குடி முருகபூபதி, கோரவள்ளி கோவிந்தன், கும்பரம் பால்சாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய பிரதிநிதி பூர்ணவேல், பெருங்குளம் துணை செயலாளர் ராஜேந்திரன், கிராம தலைவர் முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சீதாலட்சுமி, நத்தகுளம் பாலமுருகன், திருமாவளவன் என்ற செந்தூர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ரெட்டையூருணியில் உள்ள காமராஜர் சிலைக்குமண்டபம் ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மண்டல செயலாளர் கண்.இளங்கோ, மாவட்ட செயலாளர் பத்மநாபன், மண்டபம் ஒன்றிய தலைவர் முகமது மீரான், இளைஞர் பாசறை காளீசுவரன், அண்ணாமலை, சுப்பிரமணியன், அருள்ஒளி முருகன், விசயக்குமார், தாமரைக்கண்ணன், சாகீர் உசேன், தகவல் ஊடக பிரிவு பொறுப்பாளர் சக்தி கணேசன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.