நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்


நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 16 July 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், பணியாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை பணியாளர்களுக்கு வழங்கப்படும் இந்த பயிற்சியை நீங்கள் முறையாக பெற்று பொதுமக்களுக்கு பயன்தரக் கூடிய பணிகளை தேர்வு செய்யவும், பயனாளிகளை தேர்வு செய்திடவும், முதலாவதாக திட்டமிடப்பட வேண்டும். 6 மாத காலத்திற்குரிய பணிகளை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண்மை மற்றும் வனத்துறையினருடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொலைநெறி திட்டங்களால் கிராமப்புறங்களில் நடைபெறும் பணிகள் மூலம் தற்பொழுது தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வருகிற 2019 ஜனவரி முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். பின்னர் அதை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி பிளாஸ்டிக் உபயோகிப்பதை படிப்படியாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆ.பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) முத்து இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story