நெல்லை போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டில் இயற்கை காய்கறி விற்பனை பிரிவு தொடக்கம்
நெல்லை போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் விற்பனை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இதை இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் தொடங்கிவைத்தார்.
நெல்லை,
நெல்லை டவுன் பாரம்பரியமிக்க வடக்குரதவீதியில் போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன். விவசாயிகளிடம் கட்டுப்படியான விலை கொடுத்து வாங்கி வந்து அதை நேர்மையான விலைக்கு விற்பனை செய்கிறது.
நஞ்சற்ற உணவு, நலிவற்ற உழவு, நலமான உலகு என்ற நம்பிக்கையுடன் உடுமலைப்பேட்டை பகுதியில் இயற்கை முறையில் இயற்கை உரம்போட்டு வளர்த்த காய்கறிகளான தக்காளி, கத்தரிக்கை, பீர்க்கங்காய், தேங்காய், மல்லி இலை வெண்டைக்காய், பாகைக்காய், காளிப்பிளவர் உள்ளிட்ட காய்கறிகள் இங்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் விற்பனை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. முதல் விற்பனையை இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்ற காய்கறிகளை உண்பதால் உடலில் எந்தவித நஞ்சு பொருட்களும் சேர்வதில்லை. ரசாயன உரங்கள் பயன்படுத்தி விளைவிக்கின்ற காய்கறிகளைவிட இந்த காய்கறிகள் சத்தானது எனவே வாடிக்கையாளர்கள் இந்த காய்கறிகளை வாங்கி செல்லவேண்டும், நஞ்சற்ற காய்கறிகள், நலிவற்ற உழவு, நலமான உலகு என்ற லட்சியத்தோடு இந்த விற்பனையை போத்தீஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள் தச்சை கணேசராஜா, கவிஞர் கிருஷி, மரம் மதுரை பிரசாந்த்குமார், போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் மேலாளர்கள் சுரேஷ்பாபு, அருண், அக்பர், விளம்பர மேலாளர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Related Tags :
Next Story