மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கார்த்திக்குக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி,
தர்மபுரி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 27). தொழிலாளியான இவருக்கு மனைவியும், 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே கார்த்திக்குக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு இவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை குடும்பம் நடத்த அழைத்த போது வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட கார்த்திக் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story