தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 19-ந் தேதி நடக்கிறது


தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 19-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 16 July 2018 4:00 AM IST (Updated: 16 July 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.





தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50-ம் ஆண்டு ஆனதை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்த தடகள போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.2017 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கு கொண்டு முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.2ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3-ம் பரிசாக ரூ.1000-ம் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகளாவது தமிழ்நாட்டில் வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்பட உள்ளதால் வீரர்கள் தங்கள் வங்கிக்கணக்கு புத்தக நகலினை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி கல்லூரியில் இருந்து ஆளரி சான்றிதழ் தவறாமல் கொண்டு வர வேண்டும்.


மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாநில அளவிலான தடகள போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரமும், 4 கிராம் தங்கப்பதக்கமும், 2-ம் பரிசு தொகை ரூ.25 ஆயிரமும், 4 கிராம் தங்கப்பதக்கமும், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரமும், 4 கிராம் தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது.

இந்த தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி தெரிவித்துள்ளார்.

Next Story