வேலூர் காகிதப்பட்டறை டாக்டர் வீட்டில் நகை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது 2 பவுன் சங்கிலி பறிமுதல்
வேலூர் காகிதப்பட்டறையில் டாக்டர் வீட்டில் நகை திருடிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் தீபக்செல்வராஜ் (வயது 48). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் அவரது மனைவி தேவமணியும் (43) டாக்டராக உள்ளார். இவர்கள் வீட்டில் விருப்பாட்சிபுரம் காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி மகாலட்சுமி (35) வீட்டு வேலை செய்து வந்துள்ளார். தீபக்செல்வராஜ் வீட்டில் நகை, பணம் அடிக்கடி காணாமல் போய் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் வீட்டு பீரோவில் இருந்த பணத்தை மகாலட்சுமி திருடி உள்ளார். இதைப்பார்த்த தேவமணி கையும், களவுமாக மகாலட்சுமியை பிடித்துள்ளார். பின்னர் அவர் இதுதொடர்பாக கடந்த மாதம் 24-ந் தேதி வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகாலட்சுமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் தேவமணி, தீபக்செல்வராஜ் ஆகியோர் வேலைக்கு சென்றவுடன் மகாலட்சுமி வீட்டில் உள்ள நகைகளை சிறிது, சிறிதாக சுமார் 27 பவுன் வரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், டாக்டர் வீட்டில் திருடிய நகைகள் சிலவற்றை வேலைக்கார பெண் மகாலட்சுமி மேல்விஷாரத்தை சேர்ந்த பிரபுதாஸ் (28) என்பவரிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரபுதாசை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் மகாலட்சுமியிடம் இருந்து நகைகளை பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து பிரபுதாசை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story