காமராஜர் பிறந்தநாள்: சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் பிறந்தநாள்: சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 July 2018 5:30 AM IST (Updated: 16 July 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி,

காமராஜரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள காமராஜரின் உருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கட்சித்தலைவர் ரங்கசாமி தலைமையில் 100 அடி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்து, சுகுமாறன், கோபிகா, கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க.வினர் ஜெயபாலன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தங்க.அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், மூர்த்தி, பாண்டுரங்கன், செந்தில்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி அனைத்து நாடார் கூட்டமைப்பு மற்றும் புதுவை சான்றோர்குல கிராமணியார் தரும பரிபாலன சபை சார்பில் கிராமணியார் சபையின் தலைவர் சாமிநாதன் கிராமணி தலைமையில் பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செயலாளர் துரை, பொருளாளர் தங்கராசு, தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் ராமர் நாடார், செயலாளர் சாமி உள்பட பலர் கலந்துகொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுவை மாநில சிவாஜி பேரவை சார்பில் உழந்தைகீரப்பாளையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு பேரவை தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன் ரெட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். காங்கிரஸ் பிரமுகர் திருவேங்கடம், சிவாஜி பேரவை நிர்வாகிகள் முருகன், பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story