வேலை நிறுத்த போராட்டத்திற்கு பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு


வேலை நிறுத்த போராட்டத்திற்கு பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு
x
தினத்தந்தி 16 July 2018 4:30 AM IST (Updated: 16 July 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய அளவில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் லாரிகள் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று பரமத்தியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல், செயலாளர் செந்தில்குமார், இணைச்செயலாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* மத்திய மாநில அரசுகள் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

* டீசல் விலை உயர்வை குறைத்து, டீசல் மற்றும் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரவேண்டும்.

* நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.


* மாநில அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி முதல் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான லாரிகள் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பரமத்திவேலூர் லாரி சப்ளையர்கள் சங்கம், பயணிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Next Story