மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆகஸ்டு 7-ந் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்,
தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி, பொருளாளர் குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பின்னர் சம்மேளன தலைவர் ஆறுமுகநயினார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு பதவிக்கு வந்தது முதல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே கடைபிடித்து வருகிறது. மோட்டார் தொழிலை, பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைக்கும் நோக்குடன், மோட்டார் போக்குவரத்து சட்டத்தில், பல்வேறு திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள சட்டம் அமலுக்கு வந்தால், மோட்டார் தொழிலை நம்பி உள்ள சிறு உரிமையாளர்கள், டிரைவர்கள், மோட்டார் தொழிலாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
வாகனங்களை புதிதாக வாங்கி பதிவு செய்வது, தகுதி சான்று பெறுவது, பராமரிப்பு உள்பட அனைத்தும், பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படும். இருசக்கர வாகனம் முதல், கனரக வாகனம் வரை அனைத்தும் வாகன உற்பத்தியாளர்களிடம் மட்டுமே பழுது பார்க்க வேண்டும். அதனால் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக, அகில இந்திய அளவில் வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி மோட்டார் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, மத்திய தொழிற்சங்கம் முடிவு செய்து உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற உள்ள மோட்டார் வாகன தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகத்தில் சம்மேளனம் முடிவு செய்து உள்ளது.
எனவே அன்றைய தினம் அரசு பஸ், ஆட்டோ, லாரி, சிறிய சரக்கு வாகனங்கள், கார், இருசக்கர வாகன ஒர்க்ஷாப்புகள் உள்பட அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்கக்கட்டணம் வசூல் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story