ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமற்றது ஈரோட்டில் தா.பாண்டியன் பேட்டி
ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமற்றது என்று ஈரோட்டில் தா.பாண்டியன் கூறினார்.
ஈரோடு,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகம் ‘எம்.கல்யாணசுந்தரம் இல்லம்’ என்ற பெயரில் ஈரோடு சூரம் பட்டி நால்ரோடு கருப்பண வீதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக் கரசு தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் வரவேற்று பேசினார். கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் தேசியக்குழு உறுப் பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறிய தாவது:-
தமிழகத்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முடியாதபோது 8 வழிச்சாலையும், புல்லட் ரெயிலும் தேவைதானா? என்பதை அரசு ஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டும். இந்த திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண் டும்.
இது மக்களை காக்கும் திட்டமாக தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக் காக நிறைவேற்றப்படும் திட்ட மாக தெரிகிறது. பயணக்காலம் குறையும், பெட்ரோல் செலவு குறையும் என 8 வழிச்சாலை திட்டத்திற்கு காரணம் கூறி வருகிறார்கள்.
மத்திய அரசு கல்வித்துறை யிலே தலையிட்டு, வருங்கால சந்ததியோடு விளையாடக் கூடாது. கல்வியாளர்களை வைத்து ஆழமாக சிந்தித்து திட்டங்களை அறிவிக்க வேண்டும். யு.சி.ஜி., ஐந்தாண்டு திட்டக்குழுவை அழித்தனர். நிதி முறையை மாற்றி அமைத்தனர். பாராளு மன்றத்தை செயல்படாமல் ஆக்கி விட்டனர். அதேபோல் கல்வித்துறையிலும் ஒரு தனி மனிதன் நினைப் பதையெல்லாம், கல்வித்திட்ட மாக கொண்டு வந்து இளம் சந்ததியோடு விளையாடுவது என்பது முழுக்க முழுக்க தவறு. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி என்பது தேவையில்லை. அந்தந்த மாநிலத்தின் கலா சாரம், பண்பாடு, வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி திட்டங்களை வகுக்கிற முழு உரிமை மாநில அரசிடம் இருக்க வேண்டும். அதிலே மத்திய அரசு தலையிட கூடாது.
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. ஏனென்றால் இந்த நாடு ஒரே வளர்ச்சி முறையிலே வரவில்லை. இதனை யாருமே விரும்பவில்லை. எனவே சிக்கனம் என்ற பெயரில், தற்போது ஒரே நாளிலேயே தேர்தலை நடத்தி விடுவேன் என்பதற்கு பதிலாக, வெளி நாடுகளுக்கு பிரதமர் செல்லும் செலவை முதலில் சுருக்க வேண்டும்.
உலகமயம் என்று சொல்லி எங்கே மலிவாக கிடைக் கிறதோ, அங்கு பொருட்கள் வாங்குவதுதான் புத்திசாலித் தனம். அமெரிக்காவின் உத்தரவிற்கு பயந்து, டாலரை கொடுத்து பெட்ரோலை வாங்க வேண்டியதில்லை. ரூபாய்க்கு பெட்ரோல் தருகிறேன், கோதுமையை பெற்று தருகிறேன், கத்தரிக்காய் வாங்கிக்கொண்டு தருகிறேன், கடனாகத் தருகிறேன், கப்பலில் வரவில்லையென் றால், குழாய்மூலம் அனுப் புகிறேன் என்றெல்லாம் ஈரான் சொல்லும்போது, அத்தனை யும் நிராகரித்துவிட்டு, அமெரிக்கா கோபித்து கொள்ளும் என்று அஞ்சும் கோழைகள் ஆளுகின்ற வரையில் நாம் இந்த கப்பம் கட்டியாக வேண்டும்.
ஊழல் நிறைந்த மாநிலம் என அமித்ஷா கூறி இருக்கிறார். அவர் கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தே சொல்லி கொள்ளட்டும். அவரது மகன் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பது தெரியும். 2 ஆண்டு களில் 16 ஆயிரம் மடங்கு சொத்து சேர்த்துள்ளார். அவர் சொன்னதை வைத்து தமிழகத்தில் ஊழல் உள்ளதா என சொல்ல தேவை யில்லை.
கல்வி வளர்ச்சி நாள் எனக்கூறி, ஞாயிற்றுக் கிழமையன்று பள்ளிக்கூடத் துக்கு மாணவர்களை வரவழைத்து விட்டு, அரசாணை வரவில்லை என்று திருப்பி அனுப்பியது நிர்வாக முறைகளில் உள்ள குளறுபடிகள். முன்கூட்டியே திட்டமிட்டு இருக்க வேண் டும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
விழாவில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் கே.சுப்பராயன், மாநிலக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர் ப.பா.மோகன், தமிழக பசுமை இயக்க தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story