ஆட்டோ டிரைவர்கள் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது
பட்டாபிராமில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 2 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தேவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 40). இவரது நண்பர் கார்த்திகேயன் (35). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் 2 பேரும் ஆவடியில் இருந்து திருநின்றவூர் வரை ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பட்டாபிராம் பஸ் நிலையம் அருகே ஆட்டோவில் ஆட்களை ஏற்றினர்.
அப்போது பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான ராஜா (35), முகமது ரபீக் (35), அம்ஜித்கான் (32), சதீஷ்குமார் (31) ஆகிய 4 பேரும் நீங்கள் எப்படி ஆட்களை உங்கள் ஆட்டோவில் ஏற்றலாம் என்று கூறி அவர்களிடம் தகராறு செய்தனர்.
மேலும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ஆட்டோ டிரைவர்களான சுகுமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர்கள் ராஜா, முகமதுரபீக், அம்ஜித்கான், சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தார்.

Related Tags :
Next Story