மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக் சாகர் ஏரி நிரம்பியது
மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக் சாகர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
மும்பை,
மும்பைக்கு வைத்தர்னா, மோடக் சாகர், தான்சா, பட்சா, விகார், துல்சி ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் கிடைக்கிறது. மும்பையில் கடந்த மாதம் மழைக்காலம் தொடங்கியது. இதில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 9-ந் தேதி துல்சி ஏரி நிரம்பியது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மும்பையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் நேற்று மதியம் 3.05 மணிக்கு மும்பைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான மோடக் சாகர் நிரம்பியது. தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. மும்பைக்கு இந்த ஏரியில் இருந்து தான் அதிகளவு குடிநீர் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடக் சாகரில் இருந்து மும்பைக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 178 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. பருவமழை தொடங்கி 1½ மாதத்துக்குள் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 2 ஏரிகள் நிரம்பி இருப்பது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடக் சாகர் ஏரி கடந்த ஆண்டும் ஜூலை 15-ந் தேதி அன்று தான் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டும் அந்த ஏரி அதே தேதியில் நிரம்பி உள்ளது பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story