அரியலூரில் பல்துறை அலுவலக நடைபாதை பூமியில் புதைந்தது


அரியலூரில் பல்துறை அலுவலக நடைபாதை பூமியில் புதைந்தது
x
தினத்தந்தி 16 July 2018 10:30 PM GMT (Updated: 16 July 2018 7:08 PM GMT)

அரியலூரில் கடந்த 2004-ம் ஆண்டு மூன்று தளங்கள் கொண்ட பல்துறை அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 2006-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

அரியலூர்,

அரியலூரில் கடந்த 2004-ம் ஆண்டு மூன்று தளங்கள் கொண்ட பல்துறை அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு 2006-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பராமரிப்பு அலுவலகம் உள்பட 25 அலுவலகங்கள் செயல் படுகிறது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் நேற்று மாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உள்ள நடைபாதை சுமார் 10 அடி நீளத்திற்கு 2 அடி ஆழம் தரையில் திடீரென்று இறங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து அந்த பாதை வழியாக யாரும் செல்லாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அலுவலகம் கட்டு வதற்கு முன்பு அந்த பகுதி சதுப்பு நிலம், எப்போதும் தண்ணீர் நின்று கொண்டிருக்கும். தற்போது சிறிய மழை கூட பெய்யவில்லை. திடீரென நடைபாதை உடைந்து கீழே இறங்கியதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடம் பலமாக உள்ளதா? மழை பெய்தால் பாதிப்பு ஏற்படுமா? என்று ஆய்வு செய்ய வேண்டும். 100 ஆண்டுகள் ஆன தாலுகா அலுவலகம் எந்த சேதமும் அடையவில்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பல்துறை அலுவலகம் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஒரு வித பயத்துடன் உள்ளனர். 

Next Story