மாமல்லபுரத்தில் தனியார் ஓட்டல் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் அருகில் செல்லும்போது வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இருந்து, வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி நட்சத்திர ஓட்டல் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் அருகில் செல்லும்போது வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் டிரைவர் செல்வராஜ்(வயது 42) வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். பின்னர் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் வேன் முழுவதும் தீ பரவியது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. வேன் தீப்பிடித்து எரிந்ததும், டிரைவர் உடனடியாக கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த தீ விபத்து காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வேனில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story