செங்கல்பட்டு சரகத்தில் கடைகளில் இருந்து முத்திரையிடப்படாத 35 தராசுகள் பறிமுதல்


செங்கல்பட்டு சரகத்தில் கடைகளில் இருந்து முத்திரையிடப்படாத 35 தராசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கடை கடையாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்)ரவிஜெயராம் தலைமையில், காஞ்சீபுரம் மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆனந்தன், லிங்கேஸ்வரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மாலா, பொன்னிவளவன், நாகராஜன், செந்தில்குமார், முத்திரை ஆய்வாளர்கள் பிரகாஷ், கோவிந்தராஜன் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கடை கடையாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் முத்திரையிடப்படாத 35 தராசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 12 நிறுவனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் சட்டவிதிகளின்படி கடுமையான துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரையிட்டு மறுபரிசீலனை சான்றுகளை நிறுவனங்களில் நன்கு தெரியும்படி காட்டிவைக்கவேண்டும் என்று காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)ரவிஜெயராம் தெரிவித்தார்.

Next Story